Sunday, June 20, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்- ஒரு அறிமுகம்

நான் இந்த "ப்ளாக்" இனைத் தொடங்கக் காரணமாக இருந்தவர் வெற்றி வானொலியில் வேலை செய்யும் அருண் பிரசாத் எனும் ஒருவர், அவரிற்கு நன்றிகள்.
அவரின் ஒரு பதிவுக்குக் கருத்துரையிட்டிருக்கிறேன் , வெளியிடுவாரா என்று தெரியவில்லை , ஆனால் நிச்சயமாக அதை நாளை எனது இணையத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
பல சமயங்களில் யோசித்திருக்கிறேன், இந்த மாதிரி முயற்சி தேவையா என்று, ஆனால், சில சமயம் தேவைதான்!
தடுப்பூசி போடமுடியாவிட்டாலும் நோய் வந்த பின்பு, அதற்குரிய மருத்துவத்தைத் தாமதமின்றிச் செய்யவேண்டியது ஒரு மருத்துவனின் கடமை. நானும் மருத்துவன் தான், M.B.B.S. இனை மட்டும் குறிப்பிடவில்லை, எனது degree மட்டும் இந்தப் பதிவுக்குக் காரணமல்ல, நோய் வந்த பதிவுகளுக்கும், பதிவர்களுக்கும் கூட மருந்து தேவைதானே?!

இவற்றைத் தாண்டி, மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன், நாளைய நாளை யார் அறிவார்?
பார்க்கலாம்...